ஆசிரியர்கள் பதவி உயர்வு - நீதிமன்ற உத்தரவு

Update: 2023-06-07 02:07 GMT

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்ற ​​சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென, டிட்டோ ஜாக் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆசிரியர் பதவி உயர்வு பெற, தகுதித் தேர்வு தேவையில்லை என அரசு கொள்கை முடிவெடு​த்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 12-ஆம் தேதி வட்டார தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்