"கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்" - போப் வேதனை
கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார்.
அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.