குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்த தொடர்பான வழக்குகள்- 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் இந்த சோதனையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்,
குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், 20 மாநிலங்களில் 56 இடங்களில் இந்த அதிரடி சோதனையை நாடு தழுவிய அளவில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.