பொங்கல் பண்டிகை - சொந்த ஊர் செல்ல 1.62 லட்சம் பேர் முன்பதிவு

Update: 2023-01-05 05:29 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை, 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அதன்படி, சென்னையில் இருந்து 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, 10 ஆயிரத்து 749 சிறப்பு பேருந்துகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 6 ஆயிரத்து182 சிறப்பு பேருந்துகளும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு பேருந்துகளில் கடந்த மாதம் 12 ஆம் தேதி முன்பதிவு தொடங்கியதையடுத்து, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேர் வீதம் முன்பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்