இருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்த நபர்.. ஓட்டிப் பார்ப்பதாக கூறி நூதன முறையில் திருட்டு
புதுச்சேரியில், இருசக்கர வாகனத்தை வாங்குவது போல் நடித்து, திருடிச் சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி திருச்சிற்றம்பலம் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய இருப்பதாக, ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.
இதை வாங்க விரும்புவதாக கூறிய ரமேஷ் என்பவர், வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி நூதன முறையில் திருடிச் சென்றதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த சேதராப்பட்டு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரமேஷை தேடி வருகின்றனர்.