பிரதமர் மோடியை விமர்சித்த அமெரிக்க முதலீட்டாளர் - யார் இந்த ஜார்ஜ் சோரோஸ்?

Update: 2023-02-20 09:18 GMT
  • அதானி குழும முறைகேடுகள் பற்றி அன்னிய முதலீட்டாளர் களுக்கும், இந்திய நாடாளுமன்றத்திடமும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜார்ஜ் சோரோஸ் கூறியுள்ளார்.
  • மியுனிச் மாநாட்டில் உரையாற்றிய சோரோஸ், அதானி சர்ச்சை, பிரதமர் மோடியை பலவீனப்படுத்தும் என்றும், இந்தியா ஒரு ஜனனாயக நாடாக உள்ள நிலையில், அதன் பிரதமர் மோடி ஜனனாயகவாதியாக இல்லை என்றார்.
  • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி, இந்திய ஜனாயகத்தை அழிக்க ஜார்ஜ் சோரோஸ் பெரும் நிதி ஒதுக்கியுள்ளார் என்றும், அவரின் கொள்கை களை செயல்படுத்தும் அரசை இந்தியாவில் உருவாக்க விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.
  • 92 வயதான ஜார்ஜ் சோரோஸ், 1930ல் ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.
  • இரண்டாம் உலகப் போரில் ஹங்கேரி யை நாசி ஜெர்மனி ஆக்கிரமித்து, பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதை பார்த்தவர்.
  • 1947ல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற சோரோஸ், அங்கு தினக் கூலியாக பணியாற்றியபடி, லண்டன் பொருளாதார கல்லூரியில், தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
  • லண்டனில் ஒரு வணிக வங்கியில் பணியாற்றிய சோரோஸ், 1956ல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தார். நியூயார்க் நகரில் பங்கு சந்தை தரகு நிறுவனத்தில் பணியாற்றிய சோரோஸ், பங்கு சந்தையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார்.
  • 1966ல் ஒரு லட்சம் டாலர் முதலீட்டில் ஒரு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கி, பின்னர் பெரும் கோடீஸ்வராக வளர்ந்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளின் தலை எழுத்தை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த பெரும் முதலீட்டாளராக உருவெடுத்தார்.
  • 1992ல் பிரிட்டீஷ் பவுண்டின் மதிப்பை பெரும் வீழ்ச்சியடைய செய்து, பல நூறு கோடி டாலர்கள் ஈட்டினார்.
  • கம்யூனிசத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த சோரோஸ், ஹங்கேரி மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச அரசுகளை வீழ்த்தி, முதலாளித்துவ
  • ஜனனாயக அரசுகள் உருவாக, பல கோடி டாலர் நிதி உதவியை 1980களில் அளித்தார்.
  • சர்வாதிகார போக்குகள் கொண்ட அரசுகளை வீழ்த்தி, ஜனனாயக சக்திகளுக்கு ஊக்கம் அளிக்க, இன்று வரை பெரும் தொகைகளை நன்கொடையாக அளித்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்