கேலி கிண்டலை தட்டி கேட்டதால் ஆத்திரம்... பாமக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை...

Update: 2023-06-13 16:42 GMT

கொல்லப்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த காளிதாசன். 34 வயதான இவர் ஜேசிபி வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் பாமக நிர்வாகியாகவும் , சாதி சங்க மாவட்ட தலைவராகவும் பதவிவகித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று மறைமலைநகர் நெடுஞ்சாலை அருகே இருந்த ஒரு பழச்சாறு கடையில் இருந்த காளிதாசனை, பைக் மற்றும் காரில் வந்த 3-பேர் கொண்ட மர்மகும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள்.ரத்த வெள்ளத்தில் சரிந்த காளிதாசனை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் துரதிஸ்டவசமாக காளிதாசன் வழியிலேயே இறந்து போயிருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், சம்பவ இடத்தில் இருந்து பைக்கில் தப்பி சென்ற விக்னேஷ் என்ற நபரை துரத்தி பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தான் அந்த கொடூரமான கொலையின் பின்னணி தெரிய வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் காட்டூர் பகுதியில், பிறந்தநாள் கொண்டத்திற்காக நான்கு இளம் வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளது.செல்லும் வழியில் பெண்களிடம், தகாத வார்த்தைகளை பேசி வம்பிழுத்துள்ளனர். இதனை கண்ட காளிதாசன் அவர்களை துரத்தி பிடித்து கண்டித்திருக்கிறார்."இவன் யார் நமக்கு புத்தி சொல்ல" என ஆத்திரம் அடைந்தவர்கள், மேலும் நான்கு பேரை அழைத்து வந்து காளிதாசனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது.காளிதாசனின் ஆதரவாளர்கள் அந்த கும்பலை அடித்து வெளுத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

அந்த தாக்குதல் அவர்களின் மனதில் கொலை வெறியை தூண்டி இருக்கிறது.சம்பவத்தன்று கையிலே ஆயுதங்களுடன் வந்து தனிமையில் இருந்த காளிதாசனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 500க்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சாதி சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நெடுஞ்சாலையில் அமர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்