மகளுக்கு அழகான கண்களைப் பெற பிளாஸ்டிக் சர்ஜரி - தாய் எடுத்த ஆபத்தான முடிவு
ஜப்பானில் அழகான கண்களைப் பெற தாய் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முயற்சிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
18 வயது குழந்தைகளுக்கு பொதுவாக இதுபோன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்து.
ஆனால் ஜப்பானில் தாய் ஒருவர் தனது மகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்...
கண்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அந்த சிறுமியும் இந்த வலி மிகுந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்...
அதிக பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெறும் நாடுகளில் ஜப்பான் 4ம் இடத்தில் உள்ளது.
அதிலும் குறுகிய கண்களை அழகாகக் காண்பிக்கும் இரட்டை கண் இமை அறுவை சிகிச்சை அங்கு மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.