பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் - திமுக எம்.பி. கெளதம் சிகாமணி கோரிக்கை
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. கவுதம் சிகாமணி கூறி உள்ளார். மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய அவர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், எரிபொருள் விலை அப்படியே இருக்கிறது என்றார். கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பயன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை எனப் பேசிய கவுதம் சிகாமணி, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.