ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான நளினி பேட்டி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கின் மற்றும் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் மனு அளித்தனர் . அதில் நளினி உண்மை குற்றவாளியை மறைக்கின்ற நோக்கில் குறை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறை மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.