பாலம் கட்ட மக்கள் எதிர்ப்பு.."அதிகாரிகள் முறையாக அறிவிக்கவில்லை" - சென்னை அருகே பரபரப்பு
சென்னை அடுத்த மதுரவாயலில் வீடுகளை அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரவாயல் சன்னதி தெரு வழியாக நொளம்பூர் யூனியன் சாலையை இணைக்கும் வகையில், 32.21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீடுகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க அதிகாரிகள் குறியீடு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்கனவே 2 பாலங்கள் பயன்பாட்டில் இருப்பதாலும், புதிதாக 4 வழி பாலம் கட்டப்படவுள்ளதாலும் புதிய பாலம் தேவையற்றது என தெரிவித்தனர்.