கை நிறைய சாவியோடு வலம் வரும் நபர்கள்... சென்னை மக்களே உஷார் - சிசிடிவி காட்சி
சென்னை, திருநின்றவூரில் நீச்சல் குளம் முன்பு நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நடுகுத்தகையில் உள்ள நீச்சல் குளம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத கும்பல் நோட்டமிட்டுள்ளது. இதில், கைகளில் எண்ணற்ற சாவிகளை வைத்திருந்த அவர்கள், ஒவ்வொன்றாக வாகனத்தினுள் செலுத்தி இரு சக்கர வாகனங்களை திருடி சென்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.