பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 250 நாளாக தொடரும் போராட்டம்!- "முதல்வருக்கு முக்கிய கோரிக்கை..."
- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் 250-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
- பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 250-வது நாளான ஞாயிறன்றும் போராட்டமும் கண்டன பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
- அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
- அதானிக்காக விமான நிலையத்துக்கு நிலம் கையப்படுத்தப்படுகிறது என்று வன்னியரசு குற்றம்சாட்டினார்.