"ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள்" நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சூதாட்டம் பந்தயங்களை ஊடகங்களில் விளம்பரம் மூலம் ஊக்குவிப்பதற்கு எதிராக அரசு ஏதேனும் அறிவுரைகள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளதா என்று ம், விதிமுறைகளை ஈடுபடும் தனிபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் இது மாநிலங்களின் ஒழுங்கு முறைக்குள் வருகிறது என்றும், பெரும்பாலான மாநில அரசுகள் சொந்த சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடுவதை தடுக்க ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், விதிமுறைகளை மீறுவோர் குறித்து கவனத்திற்கு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.