"கிம் ஜாங் உன்-க்கு அணு ஆயுத பதிலடி" - அமெரிக்கா எச்சரிக்கை.. அதிர்ச்சியில் உலகம்

Update: 2023-04-27 07:22 GMT

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால், அவரது ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

அமெரிக்க அதிபர் பைடனும், தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோலும் அணு ஆயுதங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது பேசிய இரு தலைவர்களும், கிம் அணு ஆயுதங்களை உபயோகித்தால், வடகொரியாவுக்கு அணு ஆயுதத்தாலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றும், அவரது ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும், வடகொரியாவின் ஆக்ரோஷமான ஏவுகணை சோதனைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவுக்கான பாதுகாப்பு கவசத்தை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை தென்கொரியாவிற்கு அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்