கேரளாவில், புஷ்பா -2 திரைப்பட பாடலுக்கு மாணவிகளுடன் பேராசிரியை நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடைபெற்றது. அதில், 'புஷ்பா 2' பாடலுக்கு மாணவிகள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை தலைவர் பார்வதி வேணு என்பவர், மாணவிகளின் நடனத்தை ரசித்து கொண்டிருந்தார். திடீரென அவர் தனது கையில் இருந்த பையை அருகே உள்ள நற்காலியில் வைத்துவிட்டு மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.