'கர்ப்பிணி முதல் சிறுவர்கள் வரை'.. வட கொரியாவின் கொடூர தண்டனைகள் - உலகை அதிரவிட்ட பகீர் ரிப்போர்ட்
- சர்வாதிகார ஆட்சியில் உள்ள வட கொரியாவில் நடைபெறும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை தென் கொரிய அரசு வெளியிட்டுள்ளது.
- 1953 வரை ஒரே நாடாக இருந்த கொரியா, பின்னர் இரண்டாக பிரிக்கப்பட்டது. வட கொரியா சர்வாதிகார பாதையிலும், தென் கொரியா ஜனனாயக பாணியில் செல்லத் தொடங்கின.
- மூன்று தலைமுறையாக ஒரே குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியில் சிக்கியுள்ள வட கொரியாவில், மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
- வட கொரியாவின் முதல் அதிபர் கிம் இல் சங்கின் புகைபடத்தை சுட்டிக் காட்டியபடி, தனது வீட்டில் நடமனாடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தென் கொரியாவில் இருந்து வெளியான வீடியோக்களை பார்த்தற்காகவும், போதை மருந்துகளை பயன்படுத்தியதற்காகவும்16 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- ஓரின சேர்க்கையாளர்கள், நாட்டை விட்டு தப்பி செல்ல முயல்பவர்கள் மற்றும் மத குருமார்களை சுட்டுக் கொல்ல வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆணையிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.