"மகனுக்கு யாரும் பொண்ணு தரவில்லை" - டாஸ்மாக் முன் சமையல் செய்து பெற்றோர் நூதன போராட்டம்

Update: 2023-02-09 03:47 GMT

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், டாஸ்மாக் கடையை காலி செய்யாததால் கட்டட உரிமையாளரின் குடும்பத்தினர், வாசலில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த குணமங்கலம் கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் டாஸ்மாக் நிர்வாகம், கடையை காலி செய்யாததால், கட்டட உரிமையாளரின் குடும்பத்தினர், கடை வாசலில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட அதிகாரி தொலைபேசியல் கேட்டதற்கு, டாஸ்மாக் கடை இருப்பதால், தங்கள் மகனுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்றும், தங்கள் தரப்பில் யாராவது பெண் கொடுத்தால் கடையை தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம் என்று கட்டட உரிமையாளர் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களில் கடையை காலி செய்யுமாறு கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்