ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோவாக நடித்து வருகின்றனர். 34 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியதுடன், வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு.