சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் நடுவர்... சாதனை படைத்த நியூசிலாந்தின் கிம் காட்டன்
சர்வதேச ஆடவர் டி20 போட்டியில் கள நடுவராக பணியாற்றி நியூசிலாந்தின் பெண் நடுவர் கிம் காட்டன் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 டூன்டினில் (Dunedin) நடைபெற்றது. இதில், நியூசிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன் கள நடுவராக செயல்பட்டார். இதன்மூலம், ஐசிசி முழு நேர உறுப்பினராக உள்ள நாடுகள் மோதிய போட்டியில், கள நடுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமையை கிம் காட்டன் பெற்றுள்ளார்.