பணம் எண்ணுவது போல் நடித்து நோட்டுக்களை திருட முயன்ற நபர்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள் - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நாமக்கல்லில் உள்ள செல்போன் கடைக்கு வந்த 2 டிப்டாப் ஆசாமிகள், வெளிநாட்டு கரன்சிகளுக்கு பதிலாக இந்திய ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது ஒருவர் 500 ரூபாய் கட்டுக்களை பார்க்க வேண்டும் என கேட்க, அதை எண்ணுவது போல் நடித்து, ஐந்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களை மறைத்து திருடி செல்ல முயற்சித்துள்ளார். இதை மற்றொரு கடை ஊழியர் கவனித்து தடுத்தவுடன், பணத்தை கொடுத்து விட்டு இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகளை, சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.