கைபேசி விலைகள் 5 - 7 % அதிகரிக்க வாய்ப்பு- தீபாவளிக்கு பிறகு விலை உயரும் என கணிப்பு

Update: 2022-10-22 03:29 GMT

கைபேசி விலைகள் 5 - 7 % அதிகரிக்க வாய்ப்பு-

தீபாவளிக்கு பிறகு விலை உயரும் என கணிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து, தற்போது, 82 ரூபாய் 68 பைசாவாக உள்ளது. இதன் விளைவாக, கம்ப்யூட்டர் சிப்கள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. தீபாவளி விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் அதை பாதிக்காத வகையில், தீபாவளிக்கு பிறகு கைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களின் விலைகள் இதனால் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கைபேசிகள் விலைகள் 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக, கவுன்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்ப்லே பகுதி, ஐ.சி சிப்கள் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றோடு இந்தியாவில் உற்பத்தியாகும் பாகங்களை இணைத்து, ஸ்மார்ட்போன்கள் இங்கு அசெம்பிளி செய்யப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்