ஆஸ்திரேலியாவில் காணாமல் போன கதிரியக் குடுவை.. "அதை பார்த்தால் கண்டிப்பாக 16.5 அடி தள்ளி நில்லுங்கள்" - தேடும் முயற்சியில் அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில் காணாமல் போன கதிரியக் குடுவை.. "அதை பார்த்தால் கண்டிப்பாக 16.5 அடி தள்ளி நில்லுங்கள்" - தேடும் முயற்சியில் அதிகாரிகள்
நியூமன் சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட லாரியில் இருந்த கதிரியக் குடுவை காணாமல் போயுள்ளது...
6 மில்லி மீட்டர் விட்டம் 8 மில்லிமீட்டர் உயரம் கொண்ட குடுவைக்குள் கதிரியக்கத்தன்மை வாய்ந்த சீசியம் 137 அடைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்...
ஒரு மணி நேரத்திற்கு 10 எக்ஸ் கதிர்களுக்கு சமமான கதிரியக்கத்தை வெளியிடும் சீசியம்-137 கொண்ட சிறிய சில்வர் காப்சூலைக் கண்டுபிடித்தால் பொதுமக்கள் குறைந்தபட்சம் பதினாறரை அடி தள்ளி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.