ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்
ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்
தமிழக பாஜக ஐ.டி.பிரிவு தலைவராக உள்ள நிர்மல்குமார், சமீபத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து யூடியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நிர்மல் குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.