"அரசு போராட்டம் மருத்துவர்கள் அறிவிப்பு" - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

Update: 2022-11-20 16:27 GMT

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த விருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை எனவும் கம்பரசன் பேண்ட் எனும் கட்டு போடப்பட்டதில் தான் தவறு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்