வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த பொருள்..சோதனை செய்யாமல் விட்ட அதிகாரி..களமிறங்கிய சிபிஐ

Update: 2022-08-19 09:40 GMT

கேரளாவில் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல உதவிய, சுங்கத்துறை அதிகாரியிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த முனியப்பா, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சோதனைக்கு உட்படுத்தாமல், விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்பட்டதோடு, 320 கிராம் தங்கம், ஐந்து லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில்,தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, முனியப்பா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்