நடிகர் விஜய்யை போல் டீசன்ட்டாக நடந்துகொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு இயக்குனர் மிஷ்கின் அறிவுரை வழங்கியுள்ளார். லியோ பட அப்டேட் குறித்து மிஷ்கினிடம் கேட்ட நிலையில், நடிகர் விஜய்யை போல் அவரது ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும், விஜய் ஸ்வீட்டானவர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் விஜய் ரசிகர்களுக்கு நிறைய பொறுப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.