மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி ஆட்டைய போட்ட கும்பல்... கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Update: 2023-03-20 11:26 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டம், தபால் மேடு பகுதியில் மதுபானக் கடை இயங்கி வருகிறது. நேற்றைய தினம் இரவு சுமார் 10 மணியளவில் கடை ஊழியர்களான மாதேஷ் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.
  • அப்போது, முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி கடையில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணம், விலை உயர்ந்த மது பாட்டில்கள், இருவரது செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
  • மேலும், கடையின் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி, ஹார்ட் டிஸ்கை எடுத்துக் கொண்டு ஊழியர்களை கடையில் வைத்து பூட்டிச் சென்றனர்.
  • பின்னர், கடையில் இருந்து சத்தம் வருவதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் கடையில் இருந்து ஊழியர்களை மீட்டனர்.
  • சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்