கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து கைது செய்யப்பட்ட3 பேருக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-12-08 12:55 GMT

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று பேருக்கும் டிசம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று

முகமது தவ்பிக், பெரோஸ் கான், உமர் பரூக் மேலும் மூன்று பேரை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

மூன்று பேருக்கும் டிசம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்

இதையடுத்து மூன்று பேரையும் புழல் சிறைக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்