சபரிமலை மேல் சாந்தி விவகாரம் - "நியமன விதிகளில் மாற்றம் செய்ய முடியாது" - திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டு திட்டவட்டம்

Update: 2022-12-04 13:13 GMT

சபரிமலை மேல் சாந்தி நியமன விதிகளில் மாற்றம் செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேல் சாந்தி நியமன விதிகளுக்கு எதிரான வழக்கில் வாதிட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு தரப்பு, "பதவி பொதுவான நியமனமோ, நிரந்தர நியமனமோ அல்ல.

ஒரு குறிப்பிட்ட சாதியிலிருந்து பூசாரிகளை மேல் சாந்திகளாக தேர்வு செய்யும் பாரம்பரியம் உள்ளது" என்றது. மேலும், புராதன காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்