"நயன்தாரா செய்தது எந்த வகையில் நியாயம்..?" - சரமாரி வந்த கேள்வி | Nayanthara | Documentary | Dhanush

Update: 2024-11-17 02:29 GMT

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் இயக்கும் எல்.ஐ.சி திரைப்படத்தின் தலைப்பு அனுமதியின்றி பயன்படுத்தியதாக இயக்குநரும், இசையமைப்பாளருமான, எஸ்.எஸ். குமரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் நயன்தாராவிற்கு எழுதிய கடிதத்தில், மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ், வழக்கு தொடர்ந்ததற்கு வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும், அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள் என்று கேட்டுள்ளார்.

எந்தப் படைப்பாளியும் தன் படைப்பை பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள் என்றும், நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில், முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை என்றும், எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க என அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்