ஐடி ஊழியர்களுக்கு போதை பொருள் விற்பனை - அதிர வைத்த கும்பலை பதற வைத்த போலீஸ் | Chennai | Drugs

Update: 2024-11-17 02:27 GMT

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில், போதைப்பொருள் விற்பனையை தடுக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக ஷாம் சுந்தர், ஜெகதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து தரமணி, துரைப்பாக்கம் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும், ஒரு கிராம் போதை பொருளை 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிராம் பெத்தபெட்டைமைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்