கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் குளத்தையே காலிசெய்த கிராமம் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-11-21 09:00 GMT

தலித் பெண் ஒருவர் பயன்படுத்தினார் என்பதற்காக, கர்நாடக மாநிலத்தில் ஒரு குளத்தையே காலிசெய்து பூஜைசெய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெகத்தோரா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு திருமணம் நடைபெற்றது.

அது முடிந்தபின்னர் மதியம் ஒரு மணியளவில் அங்குள்ள கிருஷ்ணதேவராயர் கோயில் குளத்தில் சிவம்மா என்பவர் தண்ணீர் குடித்துள்ளார்.

அதைப் பார்த்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மகாதேவப்பா எனும் உள்ளூர்த் தலைவர் கடுமையாகத் திட்டியுள்ளார்.

அத்துடன் சிவம்மா பயன்படுத்திய குளத்து நீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, பிறகு மாட்டு கோமியத்தைத் தெளித்து, சுத்தப்படுத்தும் சடங்கையும் செய்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோவும் விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்