பிரபல கடை பிரியாணியில் பூச்சி... டேபிளுக்கு கீழே போய் மேலே வந்த தட்டு... வெளியான திடுக்கிடும் வீடியோ

Update: 2025-01-02 16:11 GMT

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவருந்த வந்த தம்பதியினர், தாம் வாங்கிய பிரியாணியில் பூச்சி இருந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டிருந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள கடை உரிமையாளர்கள், சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துப் போது அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு கடைக்கு வந்துள்ளதாகவும், தட்டை மேஜைக்கு கீழே கொண்டு சென்று இரண்டு நிமிடங்களுக்கு மேல் வைத்து அதன் பின்னர் மீண்டும் மேஜை மீது வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர் என்று கூறுகின்றனர். அந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்றும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்