குப்பைத்தொட்டியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை சடலம்... சென்னையில் அதிர்ச்சி
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் ஊராட்சிக்குட்பட்ட ஓடமா நகர் கண்ணியம்மன் கோயில் அருகே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒருநாளே ஆன பெண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையை வீசி சென்றது யார் ?என்பது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.