ஆட்டை பிடிக்க வந்து சிக்கிய சிறுத்தை.. கூண்டுக்குள் இருந்தும் மிரளவிட்ட காட்சி..
ஓசூர் அருகே 30க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் தெருநாய்களைக் கொன்ற சிறுத்தை சிக்கியது...
அடவிசாமிபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த 6 வயது ஆண் சிறுத்தையை வனத்துறையினர் ஆட்டை இரையாக வைத்து வனத்துறை பிடித்தது... கிராம மக்களை அச்சுறுத்தி வந்த இந்த சிறுத்தை இஸ்லாம்பூர் அருகே பாறை இடுக்குகளில் பதுங்கி அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் தெரு நாய்களை கொன்று தின்று வந்தது.. இந்த சூழலில் தான் வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கியுள்ளது சிறுத்தை. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிரேன் உதவியுடன் மலைப்பகுதியில் இருந்து சிறுத்தை கூண்டை கீழே இறக்கி வந்த வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன