"எங்க தலைவரை இந்தியா துன்புறுத்துகிறது".. ஐநா சபையை அதிரவிட்ட நித்தியானந்தா சிஷ்யை.. பேச பேச வெலவெலத்து போன பிரதிநிதிகள்
- இந்தியாவில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டாலும், கைலாஷாவில் குஷியாக இருக்கிறார் நித்தி...
- இந்தியாவில் வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் ஏதோ நாட்டுக்கு ஓட்டம் பிடிப்பதுதான் வழக்கம், ஆனால் நித்தி அப்படியெல்லாம் இல்லை... தனி நாட்டையே அறிவித்து தனது தில்லை காட்டியவர்...
- பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியாரை பிடிக்க குஜராத் போலீஸ் இன்டர்போல் உதவியை நாடிய போது, தெற்கு அமெரிக்காவின் ஈகுவாடார் தீவு அருகே தனித்தீவை வாங்கி தனிநாடு அறிவிப்பை வெளியிட்டார் நித்தி... தனி பாஸ்போர்ட்டு, நாணயம் என நித்தி அறிவிப்பைவிட, நாட்டிலிருந்து வெளியான காட்சிகளை கண்ட பலரும் தங்களுக்கும் கைலாசாவில் இடம் கிடைக்குமா...? என கோரிக்கை விட தொடங்கிவிட்டார்கள்....
- இது ஒருபுறம் இருக்க, உலகம் முழுவதும் பேசுபொருளானது அவரது சிஷ்யைகளின் பேச்சு... ஒரு கட்டத்தில் ஐ.நாவிலும் கைலாசாவின் முழக்கங்கள் எழுந்தது. அப்போது இந்தியாவை சீண்டிப்பார்ப்பது கைலாசாவின் வாடிக்கையாக இருக்கிறது. ஆம், 2021 ஆம் ஆண்டு ஐ.நா-வின் சிறுபான்மையினர் விவகார கவுன்சில் கூட்டத்தில் பேசிய கைலாசா பிரதிநிதி, இந்தியாவில் இந்துக்களுக்கும் அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது, இந்து மதக் குருமார்கள் தாக்கப்படுகிறார்கள் என குமுறினார். இதுபோன்ற அவர்களது பேச்சுகள் எல்லாம் தவறாமல் சிரிப்பு செய்தியாகிவிடும்..
- இப்போது அதுபோன்ற நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நித்தியின் சிஷ்யை விஜயப்ரியா பேசினார்.
- அப்போது தங்கள் தலைவர் நித்தியானந்தா இந்தியாவால் துன்புறுத்தப்படுகிறார் என குற்றம் சாட்டினார்.
- விஜயப்ரியா, நித்தியானந்தாவின் சிஷ்யை (இந்து மதத்தின் மரபுகள், வாழ்க்கை முறையை புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். நித்யானந்தா மற்றும் கைலாசாவை சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? )
- கைலாசா 150 நாடுகளில் தூதரகங்களை கொண்டுள்ளதாகவும் நித்தியின் சிஷ்யை அடுக்கடுக்காக பேச, கைலாசாவை ஐ.நா. நாடாக அங்கீகரிக்கிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
- உண்மையை சொல்லப்போனால் ஐ.நா. கைலாசாவை ஒருநாடாக அங்கீகரிக்கவில்லை... ஆம், ஒரு நாட்டை ஐ.நா. சபை அங்கீகரிக்க பாதுகாப்பு கவுன்சில், பொதுச் சபையில் ஒப்புதல் பெறவேண்டும். இந்த கடுமையான விதிகளை எல்லாம் பாஸ் ஆவது கடினத்திலும், கடினம்... ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, தனி மனிதரையும், தொண்டு நிறுவனங்களையும் பேச அனுமதிப்பதில் மிகவும் தாராளமான கொள்கையை கொண்டுள்ளது. அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டு பேசிவிட்டு, யுனைடெட் ஸ்டேட் ஆப் கைலாசா பிரதிநிதி ஐ.நாவில் பேசினார் என தம்பட்டம் அடிக்கப்படுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது. இதில் ஹைலைட்டாக நித்தியின் புகைப்படத்தை ஐ.நாவில் வைத்தெல்லாம் வழிபட்டிருக்கிறார்கள் அவரது சிஷ்யைகள்...