வாசல் வரை வந்து நின்ற ஜேபி நட்டா... மோடி அருகே சீட், போட்டோஷூட் - விமர்ச்சிக்கும் அண்ணாமலை - மாஸ் காட்டிய ஈபிஎஸ்

Update: 2023-07-19 02:22 GMT

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதையடுத்து ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை மாலை அணிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

இதனிடையே, டெல்லி யில் நடைபெறும் கூட்டத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார். தங்களது கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்த கூட்டணி என்றும், தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கூட்டணி இது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்