ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் குறித்து எம்பாமிங் செய்த மருத்துவர் விளக்கம்
ஜெயலலிதா இறந்த தேதி விவகாரத்தில் எம்பாமிங் செய்த மருத்துவர் சொன்ன தகவல் முக்கியம் பெற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவரது உயிரிழப்பு குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் 2016 டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்ட போது, மரணம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அவைகளை களையும் வகையில் 2017 பிப்ரவரியில் மருத்துவ குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்த மருத்துவரும் அப்போதைய எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான சுதா சேஷய்யன், ஜெயலலிதா உடலில் எந்த துளையும் இருக்க வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்திருந்தார்.