மனைவி மகளை கொன்ற ஐடி ஊழியர்... கடன் பிரச்சினையால் விபரீத முடிவு...

Update: 2023-07-18 15:59 GMT

சென்னை - தாழம்பூர்

கைமீறிய கடனால் 7 வயது குழந்தை கொலை...

ஐடி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி...

மனைவி மகளை கொன்ற ஐடி ஊழியர்... கடன் பிரச்சினையால் விபரீத முடிவு...

கடல்ல மூழ்குனவங்க கூட நீந்தி கரை சேர்ந்திருக்காங்க.. ஆனா கை மீறி போன கடன்ல மூழ்குன எத்தனையோ மிடில் கிளாஸ் குடும்பம் கடைசி வரை அதுல இருந்து மீள முடியாம சிக்கி கிடக்கு. இங்கயும் அப்படி தான் ஒரு ஐடி ஊழியர் கடன் பிரச்சினையால சிக்கி சின்னாபின்னமாகி இருக்காரு. கடைசியில அந்த விபரீத முடிவையும் எடுத்திருக்காரு.

சென்னை தாழம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பு பகுதி அது.

காலையிலேயே அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

நான்காவது மாடிக்குள் நுழைந்த போலீசார் சற்று நேரத்தில் இரண்டு மூட்டையோடு லிப்டுக்குள் நுழைந்தனர்.

ஆம்... அந்த மூட்டையில் இருந்தது இரண்டு சடலங்கள்.

அந்த பிளாட்டிலேயே உயிருக்கு போராடியபடி கிடந்த ஆண் ஒருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

உயிருக்கு போராடியபடி கிடந்தவர் அரவிந்த். சேலத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சுஜிதா. வீட்டை எதிர்த்து இருவரும் 7 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு 7 வயது ஐஸ்வரியா என்ற மகள் இருந்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் ஐடி துறையில் வேலை பார்த்ததால் கைநிறைய சம்பாதித்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, கடன் வாங்கி இந்த பிளாட்டை வாங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் திடீரென இருவருக்கும் வேலை பறிபோயிருக்கிறது. கடனுக்கு வட்டி, வீட்டு செலவுகள், குழந்தையின் படிப்பு என எக்கசக்கமாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடன் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. நாளாக நாளாக கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் பெற்றோர் தரப்பிலிருந்து எந்த உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால் கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு ஏற்பட்டு அடிக்கடி தகராறு வெடித்திருக்கிறது.

அரவிந்தும் சுஜிதாவும் விரக்தியின் உச்சதுக்கே சென்றிருக்கிறார்கள். அந்த சூழலில்தான் அந்த விபரீத முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆம்... குடும்பத்தோடு அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று இரவு, மூவரும் விஷ மாத்திரையை சாப்பிட்டிருக்கிறார்கள். தூக்கத்திலேயே அந்த பிஞ்சு குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. தப்பி தவறி கூட உயிர் பிழைத்து விட கூடாது என்று நினைத்த அரவிந்த் அவரது கை நரம்பையும், சுஜிதாவின் கை நரம்பையும் அறுத்திருக்கிறார்.

அடுத்த நாள் தாயும் மகளும் இறந்துவிட, அரவிந்த் மட்டும் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். கை நரம்பு சரிவர அறுபடாததால் அவர் உயிர் பிழைத்திருக்கிறார்.

உடனே போலீசாருக்கு போன் செய்து நடந்ததை கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.'

Tags:    

மேலும் செய்திகள்