தனியார் மருத்துவ கல்லூரி கட்டண வழக்கு.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க கட்டணம் நிர்ணய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணய குழு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.