"எந்நேரமும் இடிந்து விழலாம்".. உலக பாரம்பரிய சின்னத்துக்கு வந்த நிலைமை

Update: 2023-05-21 06:20 GMT

பிரமாண்ட மாடங்கள்... கண்ணை கவரும் மரச்சட்ட வேலைபாடுகள்.. பழமையை தாங்கி நிற்கும் குவிமாடம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை...

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை ஒரு கட்டடக்கலை தலைசிறந்த படைப்பாகும்... யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் அரண்மனைக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பார்வையிடும் சுற்றுலாத் தளமும் கூட..

1834 பிரிட்டனின் முந்தைய நாடாளுமன்றம் தீயில் அழிந்துவிட கட்டிடக் கலைஞர் சார்லஸ் பாரியால் நவ-கோதிக் பாணியில் வடிவமைக்கப்பட்ட அரண்மனை.. இங்குதான் பிரிட்டன் நாடாளுமன்றமும் செயல்படுகிறது.

2 ஆம் உலகப்போரில் தாக்குதல்களையும் எதிர்கொண்ட நாடாளுமன்றம் பின்னர் சீரமைக்கப்பட்டது. அவ்வப்போது சிதிலமடைந்து விழுந்த கட்டிடம், தொடர்ந்து பராமரிக்கப்பட்டது. இப்படி பராமரிப்பு பணிக்காக மட்டுமே வாரத்திற்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

மெல்ல சிதிலமடைந்து வரும் இந்த பாரம்பரிய கட்டிடம் விழுந்துவிடலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. அரண்மனையில் கல்நார் படிந்துள்ளதால் விழுந்துவிடும் அபாயம் இருப்பதாக பிரிட்டன் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு எச்சரித்துள்ளது. விரைந்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகும் எனவும் எச்சரித்துள்ளது. எம்.பி.க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அங்கிருக்கும் பணியாளர்களை கருத்தில் கொண்டு சீரமைப்பு பணிகளை தொடங்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்