"சபரிமலை ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து" - உச்சநீதிமன்றம் அதிரடி

Update: 2023-05-16 11:11 GMT

சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரவணையில், பயன்படுத்தும் ஏலக்காய் தரமில்லை எனக் கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், திருவனந்தபுரத்தில் சோதனை செய்ததில் ஏலக்காய் தரமில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் உள்ள ஆய்வகத்திற்கு மீண்டும் அரவணையை சோதனைக்கு அனுப்பக்கோரி, தேவசம் போர்டு, கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் பரிசோதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, சி.டி.ரவிக்குமார் அமர்வு அரவணை மாதிரியை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்