இந்திய ரயில்வே, ஆகஸ்ட் மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்டு, சாதனை படைத்துள்ளது.
இந்திய ரயில்வே இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 119.32 மெட்ரின் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவைவிட 7.86 சதவீதம் அதிகமாகும்.
இதன் மூலம் இந்திய ரயில்வே, தொடர்ந்து 24வது மாதமாக சிறந்த மாதாந்தர சரக்குப் போக்குவரத்தை பதிவு செய்துள்ளது.
இந்தாண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரயில்வே 620.87 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, இது 58.11 மெட்ரிக் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.