மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் வகையில், இந்தியக் கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் விரைவில் அம்மாநிலத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக பெங்களூருவில் அண்மையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், இந்த அணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் பதற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரண்டு பெண்கள் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்தியக் கூட்டணி கட்சியின் பிரதிநிதிகள், விரைவில் மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.