கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரும் கடல்... கடலூர் சில்வர் பீச்சில் தெரிந்த மாற்றம்
கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரும் கடல்... கடலூர் சில்வர் பீச்சில் தெரிந்த மாற்றம்
கடலூர் சில்வர் பீச் கொஞ்சம் கொஞ்சமாக தனது மணற்பரப்பை இழந்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினாவிற்கு அடுத்தபடியாக நீண்ட நெடிய மணற்பரப்பை கொண்டது கடலூர் சில்வர் பீச் எனப்படும் வெள்ளி கடற்கரை. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 250 மீட்டர் மணற்பரப்பை இழந்து, தற்போது சிறிய அளவில் மட்டுமே காணப்படுகிறது. சமீபத்தில் வங்க கடலில் அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் இருந்த காரணத்தினால், சமீபத்தில் மட்டும் 50 மீட்டர் அளவிற்கு மணல் பரப்பை இழந்து கடல் நீர் உட்புகுந்து உள்ளது. சுனாமி வந்த பின், தேவனாம்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைக்காமல் நேரடியாக இதுபோன்று கற்களை கொட்டுவததால் தான், மணற்பரப்பை சில்வர் பீச் இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.