இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில், மக்மஹன் கோட்டை அங்கீகரித்த அமெரிக்க செனட் சபை, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவித்துள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
- அதில், இரு நாட்டுக்கும் இடையேயான சர்வதேச எல்லையாக மக்மஹன் கோடு அங்கீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
- இந்தியாவுக்கும், இந்தோ - பசுபிக் பகுதிக்கும் சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள செனேட்டர் பில் கெஹேர்டி, இந்த நேரத்தில், இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பது அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றார்.
- மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.