மனதின் குரல் 99வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். பிறந்து வெறும் 39 நாட்களே ஆன உயிரிழந்த அபாபத் என்ற பெண் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களைப் பாராட்டி கலந்துரையாடினார். இறக்கும் ஒருவரது உடல் உறுப்பு தானங்கள் மூலம், ஏழு முதல் எட்டு பேரது உயிர் காக்கப்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆஸ்கர் விருது வென்ற "எலிபன்ட் விஸ்பர்ஸ்" திரைப்படத்தின் இயக்குனர்கள். நாகாலாந்தில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்ற பெண்கள் என பலரையும் சுட்டிக்காட்டி பேசிய பிரதமர், இந்தியப் பெண்கள் நாட்டின் ஆக்ஸிஜனங்களாக திகழ்வதாகத் குறிப்பிட்டார்.
குஜராத், சௌராஷ்ட்ரா தமிழ் சங்க நிகழ்ச்சி குறித்து பேசிய பிரதமர், குஜராத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையிலான உறவு நீண்ட காலத்திற்கானது என்று தெரிவித்தார். ரமலான் நோன்பு மாதம், ராம நவமி உட்பட பல மதங்களின் திருவிழாக்கள் ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை மனதில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.