"குணமடைந்த பிறகு ரிஷப் பண்ட்டை கன்னத்தில் அறைவேன்" - கண்டித்த கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கிய நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ள ரிஷப் பண்ட், வெளியே அமர்ந்து புதிய காற்றை சுவாசிப்பதே பெரும் ஆசீர்வாதமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ், ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணியின் தேர்வை சிதைத்து விட்டதாகவும், குணமாகி வந்தவுடன் அவர் கன்னத்தில் பளாரென்று அறைவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட் தனது உடல்நிலையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கும் பெற்றோர் போல, ரிஷப் பண்டை கண்டிக்க விரும்புவதாகவும் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.