மனைவியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சித்த கணவன் - வெளியான பரபரப்பு வீடியோ
கேரள மாநிலம் கொட்டாரக்கர கரையருவி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் அகில்ராஜூ.
இவருக்கும் வழக்கறிஞர் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த 2016 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கருத்துவேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த சென்ற கணவர் அகில்ராஜூ, தாமரைசேரி பகுதியில் ஐஸ்வர்யா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதில் ஐஸ்வர்யாவின் உடலில் தீ பற்றிய நிலையில் நடுரோட்டில் உருண்டு தீயை அணைத்தார்.
அதனை தொடர்ந்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கணவர் அகில்ராஜூவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.